சளி-காய்ச்சல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
சாமந்தி பூ 1
பூண்டு (பற்கள் ) 2 எண்ணிக்கை
இஞ்சி சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
தேன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • பிறகு பூண்டு (பற்கள் ) மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களை நசுக்கி கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
  •  மேலும் இதனுடன் சாமந்தி பூ இதழ் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும்.