மண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

முள்ளங்கி 50 கிராம்
தேன் 10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு முள்ளங்கியை சிறு சிறுத்துண்டுகளாக நன்றாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு நறுக்கிய முள்ளங்கி உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு சாறு வரும் அளவுக்கு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த சாற்றுடன் 10 மி.லி தேனையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த சுத்தமான சாறை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நீர் கடுப்பு,நீர் எரிச்சல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஆகிய நோய்களில் இருந்து விடுபடலாம்.