தேவையான பொருள்
கோதுமை ரவா | 20 கிராம் |
உப்புக்கடலை | 20 கிராம் |
கம்பு | 20 கிராம் |
கேழ்வரகு | 20 கிராம் |
அரிசி | 20 கிராம் |
முந்திரி பருப்பு | 40 கிராம் |
பாதாம் பருப்பு | 40 கிராம் |
பனை வெல்லம் | தேவையான அளவு |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு பனை வெல்லம் தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்தபொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .
- மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் இரண்டு தேக்கரண்டி அரைத்தப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு நன்கு கூழ் தன்மை அடையும் வரை கொதிக்க விடவும்.
- இது இயற்கை பொருளால் உருவான சத்தான கூழ் ஆகும்.