முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு அம்மான் பச்சரிசி செடி இலை மற்றும் கீழாநெல்லி ஆகிய இரண்டுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து அம்மியில் வைத்து நன்கு சாறு போன்ற தன்மை வரும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 50 மி.லி தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இந்த தேங்காய் எண்ணெயுடன் சாறு போன்ற அரைத்த பொருட்களையும் சேர்த்து கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைத்த தைலத்தை காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் கால் ஆணி புண் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வலி நீங்கி கால் ஆணி புண் சரியாகி விடும்.