மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

கீழாநெல்லி தேவையான அளவு
பூண்டு
(பற்கள்)
2 எண்ணம்
பெருஞ்சீரகம் 5 கிராம்
ஆவாரம் பூ 10 எண்ணம்
ஆட்டுப்பால் 20 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பூண்டு,பெருஞ்சீரகம் மற்றும் ஆவாரம் பூ ஆகிய மூன்று பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
  • இதன் பிறகு கீழாநெல்லியுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து நன்றாக கூழாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்து கூழாக்கிய கீழாநெல்லியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு போடி ஆக்கப்பட்ட பூண்டு,பெருஞ்சீரகம் மற்றும் ஆவாரம் பூ ஆகிய மூன்று பொருட்களுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதன் பிறகு நன்றாக சுண்ட காய்ச்சின  20 மி.லி ஆட்டுப்பாலை இவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான மருந்தை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
  • இந்நோய் தீரும் நாள் வரை மாமிச உணவுகளை நீக்கி கொண்டு கஞ்சி சாதம் மற்றும் சாம்பார் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும்.