தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்கும் எளிய மருத்துவம்.

தேவையான பொருள்

கிராம்பு 4 எண்ணிக்கை
மிளகு 5 எண்ணிக்கை
பால் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கிராம்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக(வாசனை வரும் வரை)வறுத்து எடுக்கவும்.
  • பிறகு வறுத்த இரண்டு பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • மேலும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை(இரண்டு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த மருந்தை லேசான சூட்டில் நெற்றி மற்றும் மூக்கு மீது பூசி வந்தால் தலையில் இருந்து வியர்வை வெளியேறி தலை நீர் குறையும்.