தேவையான பொருள்
| சிகைக்காய் | 1 கிலோ |
| மருதாணி | 100 கிராம் |
| செம்பருத்தி பூ | 100 கிராம் |
| கரிசலாங்கண்ணி | 100 கிராம் |
| வெந்தயம் | 100 கிராம் |
| கறிவேப்பிலை | 100 கிராம் |
| பச்சைப் பயிறு | 100 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இந்த பொருட்களை 5 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
- உலர்ந்த பொருட்களை நன்கு பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த பொடியை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து 5 நிமிடம் உலர விடவும்.
- பிறகு இதை தலைக்கு தேய்த்து, குளித்து வந்தால் நல்ல பலனைத் தரும்.
- இது முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
- எனவே இதில் எவ்வித பக்க விளைவும் இல்லை.

