முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தேங்காய் எண்ணெய் 50 மி.லி
கருஞ்சிரகம் 20 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 மி.லி தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • தேங்காய் எண்ணெய்யை மிதமான 5 நிமிடம் சுடுபடுத்தினால் மட்டும் போதும்.
  • மேலும் தேங்காய் எண்ணெய் உடன் 20 கிராம் கருஞ்சிரகம் சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் குளிர வைத்து விட்டு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த எண்ணெய்யை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு அல்லது வைட்டமீன் E சேர்த்துக்கொண்டு தலையில் தேய்த்து வரவும்.
  • இவ்வாறு தொடர்ந்து வாரம் மூன்று முறை செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.