சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறை

தேவையான பொருள்

பீட்ரூட் 2 எண்ணிக்கை
இஞ்சி சிறிய துண்டு
எலுமிச்சை அரைத்துண்டு
தேன் தேவையான அளவு
தண்ணீர் 250 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பீட்ரூட் தோலை நீக்கி நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய பீட்ரூட் உடன் இஞ்சி,எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனை வடிகட்டி சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது சுவையான பீட்ரூட் ஜூஸ் தயார் ஆகிவிடும்.
  • மீதி உள்ள பீட்ரூட் சக்கையை முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். 

பயன்கள்:

1) இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

2) ஒளிரும் சருமத்தை தருகிறது.

3) உடலின் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.

4) செரிமானத்திற்கு நல்லது.

5) இயற்கையாகவே உடலின் கழிவை வெளியேற்றுகிறது.