முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
மேலும் நீருடன் புதினா இலை சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மேலும் இதனுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் 12 மணி நேரம் ஒரு மூடியால் மூடி உலர வைக்கவும்.
பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 100 மி.லி குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் நன்கு சுறுசுறுப்பு தன்மை உடன் காணப்படும்.
மேலும் இந்த நீரை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையை எளிதாக நீக்கி விடலாம்.