தேவையான பொருள்
அக்ரூட் பருப்பு | 20 கிராம் |
சாரா பருப்பு | 20 கிராம் |
முந்திரி | 20 கிராம் |
பிஸ்தா | 20 கிராம் |
கசகசா | 25 கிராம் |
பாதாம் பருப்பு | 20 கிராம் |
நாட்டு பசும்பால் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் நாம் ஒவ்வரு பொருட்களையும் கொடுக்கப்பட்ட அளவுகளோடு சேகரித்துக்கொள்ளவேண்டும்.
- அதன் பிறகு பால் தவிர மீதம் உள்ள அனைத்து பொருள்களையும் ஒரு கல்வத்தில் போட்டு நன்றாக தூள் ஆக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு மிதமான சூட்டில் 100 மி.லி பாலை கொதிக்க வைக்க வேண்டும்.
- பாலுடன் ஏற்கனவே தூள் ஆக்கப்பட்டப் பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
- இவ்வாறு உருவான அற்புதமான பாலை இரவு நேரங்களில் உணவு உட்கொண்ட பின் ஒரு மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் தாது பலம் அதிகரித்து உடல் பொலிவு பெறும்.