முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோல் உரித்த வெள்ளைப்பூண்டை ஒன்று இரண்டாக கல்வத்தில் போட்டு நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி அதனுள் நசுக்கி எடுத்துக்கொண்ட வெள்ளைப்பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இதன் பிறகு வறுத்து எடுத்த இந்த அற்புதமான பூண்டு தைலத்தை நன்றாக குளிர ஆர வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பாத்திரம் படுத்த வேண்டும்.
நோய் கண்ட காலத்தில் இந்த தைலத்தை எடுத்து நெற்றில் மற்றும் பிடரி கழுத்துப் பகுதியில் வைத்து தேய்த்து வந்தால் தலைவலி,கழுத்துவலி நீங்கும்.சொரிசிரங்கு உள்ள புண்னில் பஞ்சு மூலம் தேய்த்து வந்தால் சொரிசிரங்கு புண் நம்மை அண்டாது.