தேவையான பொருள்
சீரகம் | 5 கிராம் |
கிராம்பு | 2 எண்ணிக்கை |
ஏலக்காய் | 2 எண்ணிக்கை |
கொத்தமல்லி | 5 கிராம் |
மிளகு | 5 எண்ணிக்கை |
இலவங்கப்பட்டை | சிறிதளவு |
வெற்றிலை | 2 எண்ணிக்கை |
தண்ணீர் | 200 மி.லி |
தேன் | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு வெற்றிலை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
- வெற்றிலை உடன் சீரகம்,கிராம்பு,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு அரைக்கவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.
- மேலும் தண்ணீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.
- இதனை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.