பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கை தடுக்கும் மூலிகைகள்

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 – 32 நாட்கள் வரை இருக்கும். எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் மாறுபடலாம். ஆனால் இந்த சுழற்சி ஒவ்வொரு மாதமும் சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ ஒரு ஒழுங்கில்லாமல் வந்தால் அதற்கு ஓலிகோமெனோரியா (Oligomenorrhea ) அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் என்று பெயர்.

சாதரணமாக இருப்பவர்களுக்கு உதிரப்போக்கு 4-7 நாட்களுக்கு இருக்கும்.ஆனால் இந்த பிரச்சனை இருந்தால் 1 அல்லது 2 நாட்களே இருக்கும். இந்த முறையற்ற மாதவிடாய்க்கு சீக்கிரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். மருத்துவரிடம் பரிசோதித்து வேறு காரணங்கள் எதுவுமில்லாத பட்சத்தில் நீங்கள் வீட்டிலிருந்தே இதற்கு எளிதில் தீர்வு காணலாம்.

ஆலமர வேர் :

ஆலமர வேர் ஒழுங்கற்ற மாதவிடாயை சீர் செய்யும் ஆற்றல் கொண்டது. ப்ரஷான வேரினை , நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி , அதனுடன் பால கலந்து குடிக்கலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி மாதவிடாய் சீராகும் வரை செய்ய வேண்டும்.மிக நல்ல பலன்களைத் தரும் இந்த ஆலமர வேர்.

இலவங்கபட்டை :

பட்டை மாதவிடாயை சீர் செய்கிறது. மாதவிடாயின்போது வரும் கால்வலி,தசைப் பிடிப்பு ஆகியவற்றை நீக்கும். மேலும் ஹார்மோன் சுரப்பை ஒழுங்குபடுத்திகிறது. பட்டைபொடியை பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது பட்டையை பாலில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து குடிக்கலாம். மேலும் உணவுவகைகளுடன் சேர்த்தும் சாப்பிடு வந்தால் மாதவிடாய் ஒழுங்காகும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் உள்ளது.அது ரத்த செல்களை அதிகரிக்க செய்கிறது. விட்டமின் சி இரும்புச்சத்தினை உடலில் உறிய உதவி செய்கிறது. இதனால் ரத்தம் விருத்தியாகி ,மாதவிடாய் சீராகும்.

பப்பாளி :

மலச்சிக்கலுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கும் நேரடி தொடர்புள்ளது. மலச்சிக்கல் ஹார்மோன்களை சம நிலையில் வைத்திருப்பதில்லை.இதனால் ஹார்மோன் குறைபாடு உணடாகும். இதனைத் தடுக்க பப்பாளி தினமும் உண்ண வேண்டும். பப்பாளியில் நார்சத்து அதிகம் உள்ளதால் அது ஜீரண சக்தியை அதிகரித்து , மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. இதனால் மாதவிடாயும் சீராகும்.

எள் :

எள்ளில் கால்சியம் அதிகமாக உள்ளது. மேலும் ஹார்மோன் சரியாக சுரக்காமலிருந்தால், எள் அதனை ஒழுங்குபடுத்தி சுரக்கச் செய்கிறது. ஹார்மோன்களை சமன்படுத்துகிறது. எள்ளை உணவுகளை தினமும் சேர்த்துக் கொண்டால் கால்சியக் குறைபாடில்லாமல் மாதவிடாயும் சீராகும்.

வெல்லம் :

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் ரத்தசோகையிருந்தால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கில்லாமல் இருக்கும். வெல்லத்தை வெறுமனே சாப்பிடலாம் அல்லது இனிப்பு வகைகளில் சேர்த்தோ மற்ற உணவுகளில் சேர்த்தோ சாப்பிட்டால் மாதவிடாய் பிர்ச்சனைக்கு தீர்வு காணலாம். எள்ளையும் வெல்லத்தையும் வறுத்து பொடித்து அதனை சாப்பிட்டாலும் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கிற்கு வரும்.

சரியான உணவு முறை, தினமும் உடற்பயிற்சி யோகா ஆகியவை மாதவிடாயிற்கு நல்ல தீர்வுகளைக் கொடுக்கும். இந்த பிரச்சனையால் ஏற்படும் தொல்லைகளையும் நாம் தவிர்க்கலாம் .