குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

சீரகம் 5 கிராம்
கிராம்பு 2 எண்ணிக்கை
ஏலக்காய் 2 எண்ணிக்கை
கொத்தமல்லி 5 கிராம்
மிளகு 5 எண்ணிக்கை
இலவங்கப்பட்டை சிறிதளவு
வெற்றிலை 2 எண்ணிக்கை
தண்ணீர் 200 மி.லி
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெற்றிலை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வெற்றிலை உடன் சீரகம்,கிராம்பு,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு அரைக்கவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதனை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
மிளகு
தண்ணீர்
கிராம்பு
ஏலக்காய்
கொத்தமல்லி
இலவங்கப்பட்டை
தேன்
வெற்றிலை
சீரகம்