முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வெற்றிலை காம்பு மற்றும் கிராம்பு இவற்றை ஒரு கல்வத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் அரை தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக இடித்து எடுக்க வேண்டும்.
பிறகு இவற்றை பிழிந்து சாறு மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு எடுக்கப்பட்ட சாறுடன் 5 மி.லி ஆமணக்கு முத்து எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு மென்மையான பருத்தி துணியை விளக்கு திரி போல் சுருட்டி அந்த சாற்றுடன் நனைத்து குழந்தையின் ஆசன வாயில் வைத்தால் 5 நிமிடத்தில் மலச்சிக்கல் அறவே நீங்கும்.