முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பிரண்டையை நன்கு தோல் சீவி சிறிய துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 25 மி.லி நல்ல எண்ணெய்யை இட்டு இதனுடன் மிளகு,சீரகம்,வெந்தையம்,வத்தல்,புளி,உப்பு மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களையும் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதை போல பிரண்டையும் நல்ல எண்ணெய் உடன் சேர்த்து வசக்க வேண்டும்.
இவ்வாறு வசக்கி எடுத்த பொருட்களையும் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பொருட்களை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சம்பந்தமான நோய்கள் நீங்கும்.