தேவையான பொருள்
| பால் | 150 மி.லி |
| மஞ்சள் தூள் | சிறிதளவு |
| மிளகு | 3 எண்ணிக்கை |
| சுக்கு பொடி | சிறிதளவு |
| இலவங்கப்பட்டை பொடி | சிறிதளவு |
| சப்ஜா விதை | 5 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் பாலுடன் இடித்த மிளகு,மஞ்சள் தூள்,சுக்கு பொடி மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
- மேலும் இதனுடன் சப்ஜா விதை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- இந்த பாலை காலையில் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்.

