உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்

தேவையான பொருள்

ஓமம் 20 கிராம்
சோம்பு 10 கிராம்
கருஞ்சிரகம் 20 கிராம்
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஓமம்,சோம்பு மற்றும் கருஞ்சிரகம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும்.
  • மூன்று பொருட்களையும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
  • மேலும் வறுத்த பொருட்களுடன் 200 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • 15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் உடலில் ஹார்மோன் சமநிலையை அடையும்.