தேவையான பொருள்
மிளகு | 10 எண்ணிக்கை |
சுக்கு | சிறிதளவு |
ஏலக்காய் | 2 எண்ணிக்கை |
கொத்தமல்லி | 5 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
தண்ணீர் | 100 மி.லி |
ஓமவல்லி இலை | 1 அல்லது 2 |
நாட்டு சர்க்கரை | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகுசீரகம்,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் சுக்கு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஓமவல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சளி நீங்கும்.