அமுக்கிரா கிழங்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்
நல்ல ஒரு வெள்ளை துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிரா கிழங்கு பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்து கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து கொள்ளவும் .
மற்ற மருந்துகளை தனித்தனியாக மீண்டும் இடித்து சலித்து கொள்ளவும்.
எல்லா பொடிகளையும் நன்கு கலக்கி கொள்ளவும்.
ஒரு கிலோ தேனை ஒரு சிட்டியில் ஊற்றி மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிது சிறிதாக்கி கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்.