முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரில் 10 கிராம் உப்பை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் 10 மி.லி எலுமிச்சை சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் கழித்து இந்த நீரில் 5 நிமிடம் வாயை மற்றும் தொண்டையை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் செய்து வந்தால் தொண்டை புண்கள் முற்றிலுமாக நீங்கும்.