மார்பு சளியை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சுக்கு 20 கிராம்
மிளகு 20 கிராம்
திப்பிலி 20 கிராம்
தனியா 20 கிராம்
சித்தரத்தை 20 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு எடுத்துக்கொள்ளப்பட்ட  ஐந்து வகையான பொருட்களையும் தனித்தனியே ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது வறுத்து எடுத்த பொருட்களை எல்லாம் ஒரு கல்வத்தில் இட்டு நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • .இந்த பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க நீரை தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் மார்பு சளி அறவே நீங்கும்.