முடி அதிக அடர்த்தி மற்றும் பொலிவு பெற உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

மூலிகை குளியல் பொடி 20 கிராம்
தயிர் 10 மி.லி
கடலை மாவு 20 கிராம்
வெங்காயம் 20 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  •  இப்போது நறுக்கிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக நீரை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.அரைத்த வெங்காயத்தை ஒரு பருத்தி ஆடையில் இட்டு பிழிந்து அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாற்றை தலை முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் உலர வைத்த பின் குளிக்க வேண்டும்.
  • மேலும் தலையில் வெங்காயம் வாசனை நீங்க கடலை மாவு,குளியல் பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கிய பின் தலையில் தேய்த்து மேலும் குளித்து வந்தால் முடி அதிக அடர்த்தி பெற்று நன்கு பொலிவு பெறும்.
வெங்காயம்