நாள்பட்ட காயங்களை குணமாக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

குப்பைமேனி இலைஒரு கைப்புடி அளவு
கஸ்தூரி மஞ்சள் தூள்10 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு குப்பைமேனி இலையை எடுத்து அதனை அம்மியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு அரைத்த குப்பைமேனி இலையை ஒரு கைப்புடி அளவு எடுத்து உருட்டி கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் 10 கிராம் கஸ்துரி மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த கலவையை உடலில் ஏற்பட்ட காயங்களின் மீது பூசி வந்தால் நாள்பட்ட காயங்கள் முற்றிலுமாக குணமாகி விடும்.
  • மேலும் இந்த கலவையை உடல் முழுவதும் பூசி வந்தால் சருமம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமாகும்.
கஸ்தூரி மஞ்சள் தூள்