சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

ஓமவல்லியின் இலை ஒரு கைப்புடி அளவு
பனை வெல்லம் தேவையான அளவு
சுக்கு பொடி 5 கிராம்
ஏலக்காய் 5 கிராம்
தேங்காய் பால் 20 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஓமவல்லியின் இலையை எடுத்து அதனை அம்மியில் இட்டு நன்கு அரைத்து அதன் சாற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய இரண்டையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம்,இடித்த சுக்கு மற்றும் ஏலக்காய்,ஓமவல்லியின் இலைச்சாறு மற்றும் தேங்காய் பால் ஆகிய பொருட்களை நன்கு கலக்கி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட சாற்றினை தினமும் குடித்து வந்தால் சளி முற்றிலுமாக நீங்கும்.