தேவையான பொருள்
கடலை பருப்பு | 1 கப் |
ஜவ்வரிசி | கால் கப் |
வெள்ளம் | 2 கப் |
தேங்காய் பால் | 1 கப் |
நெய் | 4 டேபிள் ஸ்பூன் |
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகள் | தேவைக்கேற்ப |
ஏலக்காய்த்தூள் | கால் டீஸ்பூன் |
சுக்கு பொடி | 1/2 டீஸ்பூன் |
உப்பு | 1 சிட்டிகை |
செய்முறை
கடலை பருப்பை குக்கரில் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும்.
ஜவ்வரிசையை தனியே வேக வைக்கவும் முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகளை நெய்யில் வருத்து கொள்ளவும்.
- வெல்லத்தை கரைத்து வடி கட்டி கொள்ளவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து மசித்த கடலைப்பருப்பு வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
சேர்ந்து வரும் போது வேக வைத்த ஜவ்வரிசி ஏலக்காய் தூள் சிட்டிகை உப்பு முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகள் சேர்த்து கொதி வரும் போது சுக்கு பொடி தேங்காய் பால் சேர்த்து கலக்கி இறக்கினால் ரெடி.