தேவையான பொருள்
பாதாம் பருப்பு | 20 கிராம் |
மிளகு | 15 கிராம் |
சீரகம் | 15 கிராம் |
கசகசா | 20 கிராம் |
நாட்டு பசும்பால் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் ஒவ்வொரு பொருட்களையும் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கசகாச,பாதாம் பருப்பு,மிளகு மற்றும் சீரகம் ஆகிய நான்கையும் ஒரு கல்வத்தில் சேர்த்து சிறுக சிறுக பாலையும் சேர்த்து நன்றாக பசை தன்மை போன்று அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு மீதி உள்ள பாலை நன்றாக சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.நன்றாக அரைத்து வைத்த பொருட்களை எடுத்து கொதிக்கும் பாலில் போட வேண்டும்.
- பிறகு விழுது போல் மாறிய கலவையை சூடு ஆற வைத்து தலையில் தேய்த்து ஓரிரு நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் உடல் சூடு நீங்கி எலும்புகள் வலிமை பெறும்.