தேவையான பொருள்
உலர் ரோஜா | 50 கிராம் |
சுக்கு | 50 கிராம் |
உலர் செம்பருத்தி பூ | 50 கிராம் |
ஏலக்காய் | 50 கிராம் |
நன்னாரி வேர் | 50 கிராம் |
சீரகம் | 50 கிராம் |
உலர் தாமரை பூ | 50 கிராம் |
சோம்பு | 50 கிராம் |
தண்ணீர் | 200 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே நன்கு வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீரில் இரண்டு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது அருமையான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.