தேவையான பொருள்
செம்பருத்தி பூ | 10 எண்ணிக்கை |
செம்பருத்தி இலை | 10 எண்ணிக்கை |
தேங்காய் எண்ணெய் | அரை லிட்டர் |
கறிவேப்பிலை | ஒரு கைப்புடி அளவு |
வேப்பிலை | ஒரு கைப்புடி அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.
- அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.
- பிறகு இதனுடன் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை 10 நிமிடம் மிதமாக சூடுபடுத்தவும்.
- பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த எண்ணெய் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு கிடைக்கும்.