தேவையான பொருள்
சுக்கு | 20 கிராம் |
கொத்தமல்லி | 20 கிராம் |
இஞ்சி | 30 கிராம் |
திப்பிலி | 5 கிராம் |
புதினா இலை | ஒரு கைப்புடி அளவு |
மிளகு | 5 கிராம் |
பனை வெல்லம் | 200 கிராம் |
தண்ணீர் | 1 லிட்டர் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.
- மேலும் சுக்கு,இஞ்சி,திப்பிலி,புதினா இலை,மிளகு மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சிறிது இடித்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீருடன் அரைத்த கொத்தமல்லி பொடி மற்றும் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.