தேவையான பொருள்
| மாதுளை தோல் | 100 கிராம் |
| ஆரஞ்சு தோல் | 100 கிராம் |
| சாத்துக்குடி தோல் | 100 கிராம் |
| எலுமிச்சை தோல் | 100 கிராம் |
| பாசிப்பயறு பொடி | 250 கிராம் |
| இலுப்பை புண்ணாக்கு | 250 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு நான்கு வகையான தோல்களையும் சூரிய ஒளியில் நன்கு காய வைத்துக்கொள்ளவும்.
- காய வைத்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
- இந்த பொடிகளுடன் 250 கிராம் பாசி பயிறு பொடி மற்றும் இலுப்பை புண்ணாக்கு பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மேலும் இந்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- இந்த பொடிகளை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் நோய்கள் முற்றிலுமாக நீங்கி உடல் முழுவதும் பிரகாசம் பெற முடியும்.

