தேவையான பொருள்
ஓமம் | 100 கிராம் |
சோம்பு | 50 கிராம் |
சுக்கு | 10 கிராம் |
ஏலக்காய் | 10 கிராம் |
கிராம்பு | 5 கிராம் |
இலவங்கப்பட்டை | 5 கிராம் |
பால் | 100 மி.லி |
தண்ணீர் | 100 மி.லி |
தேயிலை | இரண்டு தேக்கரண்டி |
நாட்டு சர்க்கரை | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும்.
- பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை மிதமான சூட்டில் வறுக்கவும்.
- பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி பால் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி தேயிலை சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு ஒருதேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு தேநீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்.