தேவையான பொருள்
முத்து எண்ணெய் | 10 மி.லி |
மனத்தக்காளி கீரை | ஒரு கைப்புடி அளவு |
பூண்டு | 3 பற்கள் |
சின்ன வெங்காயம் | 4 கிராம் |
சுக்கு பொடி | 5 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 10 மி.லி முத்து எண்ணெயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
- மேலும் இதனுடன் நன்றாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக்கொண்டு தாலிக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய மனத்தக்காளி கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கால் சிட்டிகை சுக்கு பொடி மற்றும் இரண்டு சிட்டிகை சீரகமும் சேர்த்துக்கொண்டு நன்றாக வசக்க வேண்டும்.பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
- இவ்வாறு கிடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாரம் மூன்று முறை செய்து சாப்பிட்டு வந்தால் வயிறு சூடு நம்மை விட்டு நீங்கும்.