தேவையான பொருள்
தண்ணீர் | 200 மி.லி |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
மிளகு | 7 எண்ணிக்கை |
இஞ்சி | சிறிய துண்டு |
பனங்கற்கண்டு | தேவையான அளவு |
இலவங்க பட்டை | சிறிய துண்டு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.
- மேலும் நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள்,இலவங்கபட்டை,இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது சுவைமிகுந்த பானம் தயார்.
- இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.