நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

கொத்தமல்லி 50 கிராம்
மிளகு 25 கிராம்
சுக்கு சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 400 மி.லி
துளசி இலை 8 எண்ணிக்கை
கற்பூர வள்ளி இலை 3 எண்ணிக்கை
இஞ்சி சிறிய துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களுடன் சுக்கு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 400 மி.லி  தண்ணீரை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் நீருடன் அரைத்த பொருட்களை ஒன்றரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் நீருடன் துளசி இலை,கற்பூர வள்ளி இலை மற்றும் இஞ்சி  சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தினந்தோறும் ஒரு வேளை குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்கும்.
தண்ணீர்
சுக்கு
மிளகு
மஞ்சள் தூள்
துளசி இலை
கொத்தமல்லி
கற்பூர வள்ளி இலை