முதலில் பாலை நன்கு காய்ச்சி இறக்கி 6 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறுடன் 1/4கப் தண்ணீர் சேர்த்து இறக்கி பின் பாலில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒரே பக்கத்தில் கலக்கவும் .
பிறகு அந்த பால் திரியும் வரை கிளறவும் அது திரிந்து பனீர் திரிந்ததும் நிறுத்தி மெல்லிய துணி கொண்டு வடித்து இரண்டு முறை தண்ணீர் பிசைந்து அலச வேண்டும் .
அதில் புளிப்பு போய் விடும். பிறகு தண்ணீரை முற்றிலும் பிழிந்து வடித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி கையால் மிதமாக சாப்டாக வரும் வரை பிசைய வேண்டும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த கலவை கொட்டி இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதில் ஏலக்காய் சேர்த்து ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆர வைக்கவும்.