முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
முளைக்கட்டி காய வைத்து அரைத்து கம்பு மாவில் சிறிகளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கையால் உதிரியாக பிசைந்து ஆவியில் சிறிது நேரம் வேகவிட்டு எடுக்கவும்.
அதில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் தேங்காய்த் துருவல் கலந்து பரிமாறவும். சுவைமிக்க நல்ல உணவு. உடலுக்கு மிகவும் நல்லது.
கம்பு அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணமடையச் செய்வதை குணமாக்கும். வயிற்றுப்புண்களை ஆற்றும்.