மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

வெற்றிலை2 எண்ணிக்கை
சின்ன வெங்காயம்2 எண்ணிக்கை
சீரகம்5 கிராம்
பூண்டு (பற்கள்)3 எண்ணிக்கை
தண்ணீர்150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த தண்ணீரில் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற முடியும்.
  • மேலும் இது எந்தவித பக்கவிளைவு இல்லாத மருத்துவம் ஆகும்.