உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

நல்ல எண்ணெய் 50 மி.லி
பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை
மிளகு 7 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டு மற்றும் மிளகு இரண்டையும் இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 50 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு 10 நிமிடம் உலர விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த எண்ணெய்யை உச்சி முதல் பாதம் வரை தடவி சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.
  • இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.
நல்ல எண்ணெய்
பூண்டு
மிளகு