ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை (உட்பகுதி ) 5 கிராம்
விளக்கு எண்ணெய் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 10 மி.லி விளக்கு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும்.
  • இதன் உடன் சோற்று கற்றாழை (உட்பகுதி ) நன்றாக அரைத்து எடுத்து அந்த சாற்றை சிறுக சிறுக விளக்கு எண்ணெய் உடன் சேர்த்து தைலமாக மாற்றி கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தைலம் இளம் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும் இவ்வாறு உருவான தைலத்தை சூடு ஆர வைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனை இரவு நேரங்களில் ஆசனவாயிலில் போட்டு தடவி விட்டால் ஆசனவாயிலில் இரத்த கசிவு ஏற்படுவது தடுக்கப்படும்.
சோற்று கற்றாழை (உட்பகுதி )