தேவையான பொருள்
சித்தரத்தை பொடி | 25 கிராம் |
திப்பிலி | 5 எண்ணிக்கை |
சுக்கு | தேவையான அளவு |
வில்வஇலை | 5 இலை |
மிளகு | 7 எண்ணிக்கை |
மலைத்தேன் | தேவையான அளவு |
வெற்றிலை | 1 முழுமையான இலை |
தண்ணீர் | 100 மி.லி. |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு திப்பிலி,சுக்கு ,மிளகு,வில்வஇலை மற்றும் வெற்றிலை ஆகிய ஐந்துப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து,அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு அரைத்தப் பொருட்களை 100 மி.லி தண்ணீர் இட்டு நன்றாக கலக்க வேண்டும்.இதன் பிறகு சித்தரத்தை பொடியையும் கால் தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தண்ணீருடன் சேர்த்து கலக்க வேண்டும்.இதனுடன் தேவையான அளவு தேனையும் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு உருவான அற்புதமான நீரை உணவுக்குப்பின் சாப்பிட வேண்டும்.இதனை 48 நாட்களுக்கும் தொடர்ந்து செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா எனும் நோய் நீங்கும்.