முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் தும்பை செடி இலை,குப்பைமேனி இலை மற்றும் கருஞ்சிரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் சிறியவர்கள் 30 மி.லி மற்றும் பெரியவர்கள் 60 மி.லி என்கிற வீதத்தில் குடித்து வந்தால் மூச்சுத்திணறல் அறவே நீங்கும்.