முகப்பரு மற்றும் முகத்தழும்புகள் மறைய ஒரு எளிய வீட்டுவைத்தியம்

தேவையான பொருள்

கருஞ்சிரகம் 10 கிராம்
பால் சிறிதளவு
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கருஞ்சிரகத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பொடியாக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் சிறிதளவு பால் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.
  • பிறகு கலக்கிய பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர விட்டு சாதாரண நீரில் முகம் கழுவவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் முகப்பரு மற்றும் முகத்தழும்புகள் எளிதில் மறைந்து முகம் பொலிவு பெறும்.