கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்

சீரகம்

வேனல் கட்டிகள் இருந்தால் சீரகத்தை நீர்விடாத தேங்காய்ப்பால் விட்டு அரைத்து நன்றாக விழுதாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் 2 நாட்களில் கட்டிகள் குணமாகும். இது பரவாமலும் தடுக்கும்.

வசம்பு

கட்டிகள் அரிப்புடன் வலியுடன் இருந்தால் அதில் இருக்கும் தொற்றையும் சேர்த்து நீக்க வேண்டும். இல்லையெனில் அவை சுற்றிலும் பரவக்கூடும். வசம்பை எடுத்து பொடியாக்கி தேங்காயெண்ணெயில் ஊறவைத்து அதை கட்டிகளின் மீது தடவி வந்தால் கட்டிகள் குணமாகும். இதே போன்று கருஞ்சீரக பொடியையும் தேங்காயெண்ணெயில் குழைத்து தடலாம்.

நுங்கு

நுங்கு கோடைக்காலங்களில் எளிதாக கிடைக்கும். நுங்கிலிருந்து வெளியேறும் நீர் கட்டிகள் வெளியேற்றும். சருமத்தை ஆற்றும். சருமத்தை மென்மையாக வைக்கும். சருமத்தை குளிர செய்யும்.

ஊமத்தம் இலை

கண்களை தவிர உடம்பில் எங்கு கட்டி வந்தாலும் நீங்கள் ஊமத்தம் இலையை எடுத்து சுத்தம் செய்து விளக்கெண்ணெய் தடவி அதை அனலில் காட்டி விடவும். இதை கட்டியின் மீது வைத்து ஒற்றி எடுத்தால் நாளடைவில் உடைந்து விடும்.

மஞ்சள்

கட்டி வீக்கத்துடன் இருந்தால் அதன் உள்ளே கிருமிகள் இருக்கும். மஞ்சள் கிருமி நாசினி பண்புகள் கொண்டவை மஞ்சள் அரைத்து அதை சுட்டு கட்டிகள் மீது பற்றுபோடாலாம். இது கட்டியின் வீக்கத்தை குறைத்து உடைக்கவும் செய்யும்.