தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

அதிமதுரம் பொடி 50 கிராம்
மிளகு 50 கிராம்
சோம்பு 50 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகு மற்றும் சோம்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தனித்தனியே மிதமான சுட்டில் நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு அதிமதுரம் பொடி,மிளகு பொடி மற்றும் சோம்பு பொடி ஆகிய பொருட்களை சமஅளவு (ஒரு தேக்கரண்டி) எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் எல்லா பொடியையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.பிறகு இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமாகும். 
அதிமதுரம் பொடி
மிளகு
தேன்
சோம்பு