மார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம்

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
சீரகம் 10 கிராம்
மிளகு 10 கிராம்
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி  தண்ணீரை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் கொதிக்கும் நீருடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் குடித்து வந்தால் மார்புச்சளி முற்றிலுமாக நீங்கும்.