அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது.வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

துளசி

துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ளவையாகும். இது வயிற்றினுள் சீதத் தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் அதிக அளவில் கொண்டுள்ளது. இது வயிற்று அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது.

பால்

பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கும்.

சீரகம்

சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைபெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும்.

கிராம்பு

இது ஒரு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் உமிழ்நீர் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது.