தேவையான பொருள்
| சுண்டைக்காய் | 15 எண்ணிக்கை |
| உப்பு | தேவையான அளவு |
| மஞ்சள் தூள் | கால் சிட்டிகை |
| சீரகம் தூள் | கால் சிட்டிகை |
| மிளகு தூள் | கால் சிட்டிகை |
| தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சுண்டைக்காய் எடுத்து இரண்டாக வெட்டி நீரில் நன்கு கழுவ வேண்டும்.
- பிறகு 100 மி.லி நீரில் வெட்டிய சுண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பு,சீரகத்தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொண்டு100 மி.லி நீர் 50 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- இவ்வாறு கிடைத்த நீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொண்டு காலையில் குடித்தால் வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை பட வேண்டாம்.

