தேவையான பொருள்
தோலுரித்த சின்ன வெங்காயம் | 10 (பொடியாக நறுக்கவும்) |
பூண்டு | 8 பல் |
தாளிப்பு வடகம் | ஒரு டேபிள்ஸ்பூன் |
வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் | தலா கால் டீஸ்பூன் |
புளி | சிறிய எலுமிச்சை அளவு |
வெல்லம் | ஒரு சிறிய துண்டு |
கறிவேப்பிலை | சிறிதளவு |
நல்லெண்ணெய், உப்பு | தேவையான அளவு |
வறுத்து அரைக்க: | |
கறிவேப்பிலை | 3 கைப்பிடி அளவு |
மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி | தலா ஒரு டீஸ்பூன் |
மல்லி (தனியா) | ஒரு டேபிள்ஸ்பூன் |
தேங்காய்த் துருவல் (விரும்பினால்) | ஒரு டேபிள்ஸ்பூன் |
காய்ந்த மிளகாய் | 5 |
செய்முறை
புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும்.
- ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.